1970ல் விவசாயிகளை சுட்டது யார்..? மல்லுக்கட்டும் அதிமுக, திமுக..!!
AIADMK response to the accusation of MKStalin
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் உள்ள நிலையில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிகிறது. இதனால் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.
குறிப்பாக எம்ஜிஆர் முதல்வராக இருந்த பொழுது ஒருங்கிணைந்த கோவை மாவட்ட விவசாயிகள் மின் கட்டணத்தை ஒரு பைசா குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர்களை அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் சுட்டுக் கொன்றதாகவும் ஈரோடு கிழக்கு தொகுதி பரப்புரையில் பேசியிருந்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அதிமுகவினர் "கடந்த 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக முதலமைச்சராக முதன் முதலில் திமுக எம்எல்ஏக்களால் கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கருணாநிதி முதல்வராக இருந்த போது தான் 1970 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் தேதி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட விவசாய சங்கத்தினர் நடத்திய மின் கட்டண குறைப்பு போராட்டத்தில் புது பாளையத்தைச் சேர்ந்த ராமசாமி கவுண்டர், வாரணாசி பாளையம் மார்கப கவுண்டர், ஈச்சம்பள்ளம் ஆயிக்ககவுண்டர் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
எனவே கோவை விவசாயிகள் ஒரு பைசா மின்கட்டண குறைப்பை வலியுறுத்தி நடத்திய போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தி மூன்று விவசாயிகளை கொன்றது அப்போதைய முதல்வர் கருணாநிதி தான்" என அதிமுகவினர் பதிலடி தந்துள்ளனர்.
English Summary
AIADMK response to the accusation of MKStalin