#BigBreaking | அதிமுகவின் மூன்றாவது அத்தியாயம்! எடப்பாடி பழனிசாமி கையில் புதிய அதிகாரம்!  - Seithipunal
Seithipunal


அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில், இன்று செயற்குழு கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த செயற்குழு கூட்டத்தில் மொத்தம் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு, அதிமுக செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், அதிமுகவில் கொள்கை ரீதியான முடிவுகளை மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம் வழங்கி இந்த செயற்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு செயற்குழுவில் வாழ்த்து தெரிவித்து, அதிமுகவின் மூன்றாவது அத்தியாயம் என குறிப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வருகின்ற ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி மதுரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாநாடு நடைபெறும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே பொதுச் செயலாளராக பதவி ஏற்ற பின்னர் கழக உறுப்பினர்களை சேர்க்கும் பனி நடக்கும் நிலையில், உறுப்பினர்களின் எண்ணிக்கையை இரண்டு கோடியாக உயர்த்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK Seyarkuzhu EPS Get More Power GS


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->