பாஜகவை அழிக்கும் வரை ஓயமாட்டோம்.!! கொந்தளிக்கும் அதிமுக தரப்பு.!! - Seithipunal
Seithipunal


கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த அதிமுக அதிகாரப்பூர்வமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. அத்தோடு பாஜகவுடன் இனி எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது என அதிமுக தரப்பு உறுதிபட தெரிவித்துள்ளது.  இந்த நிலையில் அதிமுக தனது தேர்தல் பணிகளில் மும்முறமாக ஈடுபட்டு வருகிறது. 

இதனால் அதிமுக தரப்புக்கு சிறுபான்மையினரின் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து வருவதால் தமிழக பாஜக தரப்பு சிறுபான்மையினர் ஓட்டு மட்டுமல்லாது, இந்துக்கள் ஓட்டுகள் கூட விழாது என கூறியிருந்தது குறித்து திண்டுக்கல்லில் இன்று திமுக அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர் தமிழகத்தில் பாஜகவை அழிக்கும் வரை நாங்கள் ஓயமாட்டோம். மத்தியில் தமிழகத்திற்கு யார் நல்லது செய்கிறார்களோ அந்த கட்சியின் பிரதமர் வேட்பாளருக்கு தான் எங்கள் ஆதரவு. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதிமுகவின் ஆதரவு கிடையாது. அவர்கள் கூறும் ஜோசியத்திற்கெல்லாம் எங்களால் பதில் சொல்ல முடியாது என காட்டமாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK sreenivasan said we will destroy BJP from tn


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->