அதிமுக இடத்தில் விஜய்! கவலைக்கிடமாய் கிடக்கும் அதிமுகவுக்கு அவசர சிகிச்சை! மருது அழகுராஜ் டிவிட்! - Seithipunal
Seithipunal


அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவரும், முன்னாள் ஓபிஎஸ் ஆதரவாளருமான மருது அழகுராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

அவசரசிகிச்சை

கவலைக்கிடமாய் கிடக்கும் அதிமுகவுக்கான ஒரே அவசர சிகிச்சை அனைவரும் ஒன்றிணைவது மட்டும் தான்.

அது கை கூடாது போனால்.. அதிமுக மதிமுகவாகும்..

தவெக அதிமுகவாக  மாறும்...என்ன நாஞ் சொல்றது... என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, தவெக கட்சியை சுட்டிக்காட்டி அதிமுகவிற்கு பல எச்சரிக்கை பதிவுகளை மருது ஆஸ்க்காகுராஜ் கொடுத்துள்ளார். அதில், 

2026 பதிலுக்கு காத்திருக்கும் கேள்வி:

பாஜக கட்டமைத்துள்ள NDA அணியில்  அதிமுக பங்கேற்று, கூடவே விஜய்யின் வெற்றிக் கழகத்தின் தலைமையில் மூன்றாம் அணி ஒன்று அமைந்தால், அது 2016-ன் மக்கள் நலக் கூட்டணியாகி, அதிமுக-பாஜக அணி ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு சாதகமாகும்..

அதற்கு மாறாக 

அதிமுகவோடு விஜய்யின் தவெக கூட்டணி அமைத்து, மற்றொரு பக்கம், பாஜக தலைமையிலான NDA அணி மூன்றாம் சக்தியாக மோதுமானால்.. அது 2024 நாடாளுமன்ற தேர்தலைப் போல திமுக தன் ஆட்சியை தக்க வைக்கும் அளவுக்கு ஆதாயமாகும்..

ஆக 2026 சட்டமன்ற தேர்தல் முன்னிறுத்த போவது 
2016-ஐஆ...
இல்லை 2024-ஐஆ ..
என்பது தான் கேள்வி..." என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK TVK EPS Vijay BJP DMK Annamalai OPS


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->