#பரபரப்பு : இஸ்லாமிய கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி வாகனம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு.!  - Seithipunal
Seithipunal


அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி வாகனம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி பங்கேற்றார்.

தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்னர் இன்று தலைநகர் டெல்லிக்கு திரும்பினார். இவருடைய கார் மீரட்டின் சாஜர்சி டோல் பிளாசா அருகே சென்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஒவைசி காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒவைசியின் கார் தயார் மட்டும் பஞ்சரானது. இதனையடுத்து மாற்று வாகனத்தை வரவழைத்து, ஒவைசி அங்கிருந்து புறப்பட்டார். 

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் மீரட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தனது வாகனத்தை நோக்கி மர்ம நபர்கள் சுமார் மூன்று முதல் நான்கு ரவுண்டுகள் சுட்டதாக ஒவைசி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIMIM chief Asaduddin Owaisi 4 rounds of bullets fired upon his vehicle


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->