"மதுப்பிரியர்கள் நலனுக்காக குரல் கொடுப்பேன்" - இடைத்தேர்தலில் களமிறங்கும் மதுப்பிரியர் ஆறுமுகம்..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பல்வேறு கட்சிகள் போட்டியிட முனைப்பு காட்டி வருகின்றன. அந்த வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் மதுப்பிரியர் ஒருவர் ஈரோடு பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடையிலிருந்து தனது பரப்புரையை தொடங்கியுள்ளார். தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம் என்பவர் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட உள்ளார்.

இதற்காக அவர் ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடையிலிருந்து தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார். தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் ஒரு மது பாட்டிலுக்கு ரூ.10 வீதம் அதும் அதிகமாக வசூல் செய்கின்றனர். இதற்காக தமிழக சட்டப்பேரவையில் எந்த சட்டமன்ற உறுப்பினரும் குரல் எழுப்புவது இல்லை என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மேலும் டாஸ்மாக் கடைகளின் முன்பு கிடக்கும் காலி பாட்டில்களை சேகரித்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் டெபாசிட் செலுத்தி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். அதேபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மது பிரியர்களின் நலனுக்காக சட்டப்பேரவையில் குரல் எழுப்புவேன் எனவும் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். தமிழக அரசுக்கு அதிகமான வருவாய் தரக்கூடியவர்கள் மது பிரியர்கள் மட்டும்தான் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்காத நிலையில் திமுக அதன் கூட்டணி கட்சிக்காக நேற்று பரப்புரை தொடங்கியது. அவர்களுக்கு போட்டியாக மதுப்பிரியர் ஆறுமுகம் இன்று தனது பரப்புரையை தொடங்கியுள்ளார். முக்கிய அரசியல் கட்சிகளே இன்னும் வேட்பாளர் அறிவிக்காத நிலையில் மது பிரியர் ஆறுமுகம் சுயேசையாக களமிறங்கியது ஈரோடு கிழக்கு தொகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Alcoholic contesting in Erode East byelections


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->