கட்டிய மனைவி, பெற்ற மகன் முன்னிலையில் மேலும் ஒரு படுகொலை... கன்னையா லால் கொலைக்கு முன்பே அரங்கேறிய சம்பவம்.! - Seithipunal
Seithipunal


முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் கருத்தை வெளியிட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த கன்னையா லால் என்பர் கடந்த மாதம் 28-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். மேலும், அதிர்ச்சியாக மகாராஷ்டிரா மருந்துக் கடை உரிமையாளர் உமேஷ் கோல்கே என்பவரும் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அமராவதி நகரில் அமைந்துள்ள கால்நடை மருந்து கடையின் உரிமையாளர் உமேஷ் கோல்கே (வயது 54). கடந்த ஜூன் 21-ம் தேதி இரவு தனது கடையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி உள்ளார். உடன் மகன் மற்றும் மனைவியும் மற்றொரு வாகனத்தில் உடன் சென்றனர்.

உமேஷ் கோல்கேவை வழிமறித்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலைக்கு முன்பு வழிப்பறி என்று சொல்லப்பட்ட நிலையில், கொலை தொடர்பாக முடாசிர் அகமது ஷேக் இப்ராகிம் (22), ஷாருக் பதன் கான் (23), அப்துல் தபீக் தஸ்லீம்(24), சோயீப் கான்(29) மற்றும் அதீப் ரசீத்(23) ஆகியோர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் உமேஷ் கோல்கே கருத்து தெரிவித்த காரணத்தினால் கழுத்தறுத்து கொலை செய்தோம் என்று வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதனையடுத்து, உமேஷ் கோல்கே கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AMARAVATHI UMESH MURDER CASE


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->