காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கலவரம் நடக்கும்.. அமித்ஷா சர்ச்சை பேச்சு.. காங்கிரஸ் போலீசில் புகார்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கலவரம் வெடிக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் வரும் மே 10ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சி செய்து வருகிறது. அதே போல் காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்க தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன.

கர்நாடகா மாநிலம் பெலகாவியில் உள்ள தெர்டலில் நடைபெற்ற பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்ப அரசியல் உச்சத்தில் இருக்கும் இது கர்நாடக மாநிலத்தில் கலவரத்தை உண்டாக்கும். மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மானியத்தின் வளர்ச்சி பின்னோக்கி செல்லும். ஊழல் அதிகரிக்கும் புதிய மற்றும் வளர்ச்சிப் பாதைக்கான கர்நாடக மாநிலத்தை உருவாக்க பாஜகவால் மட்டும் தான் முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு, வன்முறையை தூண்டுவதாக அவர் மீது வழக்கு பதிவு செய்ய காங்கிரஸ் கட்சியினால் போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும் சாதி மத மோதலை தூண்டும் விதமாக பேசி கர்நாடகாவின் அமைதியை அமித் ஷா சீர்குலைகிறார் என காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amit Shah controversy speech in Karnataka Assembly election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->