நவம்பர் 4ம் தேதி திருச்சியில்.. டி.டி.வி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
AMMK Executive Committee meeting on Nov 4
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன் தனியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கி அதன் பொதுச் செயலாளராகவும் இருந்து வரும் நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து அரசியலில் ஈடுபட போவதாக இருவரும் கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தனர்.
இதற்கிடையே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழக நலன் சார்ந்தே தேசிய கட்சிகளுடன் கூட்டணி என ஏற்கனவே டிடிவி தினகரன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற பொது தேர்தலில் நடைபெற இன்னும் சில மாதங்களில் உள்ள நிலையில் தினகரன் தனது நிலைப்பாட்டை கூடிய விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் வரும் நவம்பர் 4ம் தேதி திருச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் கழக தலைவர் சி.கோபால் அவர்களின் தலைமையில் வரும் நவம்பர் 4ம் தேதி சனிக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் திருச்சி ஃபெமினா ஓட்டலில் உள்ள காவிரி ஹாலில் நடைபெற உள்ளது. கழக செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கான அழைப்புகளோடு தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
English Summary
AMMK Executive Committee meeting on Nov 4