அதிமுக கூட்டணியில் அமமுக! டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி!
AMMK in ADMK BJP Alliance
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை தெரிவிக்கையில், "அம்மாவின் ஆதரவாளர்கள் எங்கு இருந்தாலும் ஒரு அணியாக இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.
ஒரே கட்சியாக இருப்பது முக்கியமல்ல, ஆனால் ஒரே நோக்கத்தில் திமுக அரசை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பது தான் முக்கியம் என தெரிவித்தார்.
அந்த நோக்கத்திற்கேதேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதே தன்னுடைய நிலை என்றும் குறிப்பிட்ட தினகரன், மக்கள் விரோதமாக செயல்படும் இந்த அரசை தொடரவிடக் கூடாது என எண்ணுகிற எல்லோரும் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்றார்.
இந்நிலையில் தான் தற்போது பலரும் அதே வழியில் வந்து கொண்டிருப்பதாகவும், தேசிய ஜனநாயக கூட்டணியை பெரிய சமுத்திரமாக எடுத்துக்கொண்டு, அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் அதிமுக தலைமையை ஏற்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதாக கூறினார்.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உறுதியாக திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
English Summary
AMMK in ADMK BJP Alliance