தீய சக்தியான திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ., முக்கிய விவகாரத்தகை கையில் எடுத்த டிடிவி., மாபெரும் போராட்டம்.! - Seithipunal
Seithipunal


அரசியலமைப்புச் சட்டத்தை மீறி மேகேதாட்டு அணை கட்ட நிதி ஒதுக்கி இருக்கும் கர்நாடகாவைக் கண்டித்தும், மத்திய - மாநில அரசுகள் அதனைத் தடுத்து நிறுத்தக் கோரியும் மாபெரும் ஆர்ப்பாட்டம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.. 

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "மார்ச் 14ஆம் தேதி திருச்சியில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது! தமிழ்நாட்டின் ஜீவாதாரமாக விளங்கும் காவிரி நதி நீரில் நமக்குரிய பங்கினைத் தராமல் பல்வேறு காலக்கட்டங்களில் கர்நாடகா வஞ்சித்து வருகிறது. 

அதிலும் தீய சக்தியான தி.மு.க எப்போதெல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் காவிரியிலும் அதன் துணை ஆறுகளிலும் புதிய அணைகள் கட்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் கர்நாடகா, இப்போதும் மேகேதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் என்று அடம்பிடித்து, அரசியலமைப்புச் சட்டத்தை காலில் போட்டு மிதித்து அதற்கான நிதி ஒதுக்கியிருக்கிறது.

இதனைக் கண்டித்தும், மேகேதாட்டு அணையைத் தடுத்து நிறுத்த மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், காவிரி பிரச்னையில் உறுதியாக நின்று சட்டப்படியான தீர்ப்புகளை நமக்குப் பெற்று தந்த இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் வருகிற மார்ச் 14ம் தேதி திங்கட்கிழமையன்று காலை 11 மணி அளவில் திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 

கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்க விருக்கிறார்கள். தமிழ்நாட்டின் உரிமையைக் காத்திட நடைபெறும் இப்போராட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, கிளை, வார்டு கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AMMK PROTEST ANNOUNCE MARCH 2022


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->