ஆந்திராவில் மரண அடி வாங்கிய ஜெகன் மோகன் ரெட்டி! ஆட்சியைப் பிடிக்கிறதா தெலுங்கு தேசம்?!
Andra Exit Poll : Telugu Desam Party on Peak
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏழு கட்ட வாக்குப்பதிவுகள் இன்றுடன் நிறைவடைந்தது. முன்னதாக ஆந்திராவில் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தலும் கடந்த மே 13ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது.
இந்நிலையில், இன்று பிற மாநிலங்களில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிறகான கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி டி5 என்ற தெலுங்கு தொலைக்காட்சி ஆந்திர சட்டமன்றத் தேர்தல் முடிவு குறித்த கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
அக்கருத்துக்கணிப்பில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் தலைமையிலான கூட்டணி 161 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைக்கும் என்று டி5 தொலைக்காட்சி கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதேசமயம் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 14 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்றும் கணித்துள்ளது.
ஆந்திராவில் 88 தொகுதிகளில் வென்றால் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க முடியும். ஆனால் டி5 தொலைக்காட்சி தெலுங்கு தேசம் கட்சி 161 இடங்களில் வெல்லும் என்று கூறியுள்ளது அங்கு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்றும் அக்கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
இதனால் ஆந்திராவில் காங்கிரஸ் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளன.
English Summary
Andra Exit Poll : Telugu Desam Party on Peak