#தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் அண்ணா நினைவு நாளையொட்டி வழிபாடு மற்றும் பொது விருந்து அனுமதி இல்லை.
anna mourning day
முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி, தமிழக கோயில்களில் நாளை சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்த அனுமதி இல்லை என தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட முக்கிய கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்தப்படுவது வழக்கம்.
ஆனால் தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதனால் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடத்த அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோயில்களில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்வினை நடத்த அனுமதிப்பது குறித்து தக்க அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது என்றும், ஜனவரி 26- ஆம் தேதி முதல் நகர்ப்புற உள்ளாட்சித் நடத்த விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்வினை நடத்த அனுமதிக்க இயலாது என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.