ஆளுநர் தான் காரணம்! தமிழக அரசு எப்படி பொறுப்பாகும்? வரிந்துகட்டிவரும் விசிக!
Anna University Case HighCourt DMK VCk
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்முறை சம்பவத்திற்கு ஆளுநர் தான் பொறுப்பு என்றும், சென்னை உயர்நீதிமன்றம் தமிழக காவல்துறையை கேள்வி கேற்று இருப்பது அதிர்ச்சியாக இருப்பதாகவும், விசிக துணை பொதுச்செயலாளர் எம்எல்ஏ சிந்தனை செல்வன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்முறை சம்பவத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி உடனே கைதை செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை தொடர்பில் காவல்துறையை நோக்கி மட்டும் அதிரடி கேள்விகளை எழுப்பியிருப்பது அதிர்ச்சியை தருகிறது.
அந்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தலைமை பொறுப்பு என்பது வேந்தர் என்கிற அடிப்படையில் ஆளுநர் ஆர்.என் ரவி அவர்களுக்குரியது. அடுத்த கட்ட நிர்வாகத்தலைமையான துணை வேந்தரை கூட நியமிக்கவிடாமல் தமிழக அரசை தடுத்து வைத்திருப்பதும் பல்கலைகழக நிர்வாகத்தை முடக்கி வைத்திருப்பதும் ஆளுநர்தான். ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல்கலைக்கழக வளாகத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பில் ஆளுநரை நோக்கி ஒரு கேள்வி கூட எழுப்பப்படாதது ஏன் என்று புரியவில்லை.
தமிழகத்தில் ஆணவ படுகொலைகளும் சாதிய வன்முறைகளும் அரங்கேறிய போது ஒரு முறை கூட தாமாக முன்வந்து அந்த வழக்குகளின் விசாரணையில் கவனத்தை செலுத்தாத உயர் நீதிமன்றம் இப்போது குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்ட வழக்கில் குறிப்பாக பாஜக போன்ற அடிப்படைவாத கட்சிகள் அரசியலாக்கும் இந்த வழக்கில் மட்டும் குறுக்கீடு செய்வதை எப்படி புரிந்து கொள்வது?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
Anna University Case HighCourt DMK VCk