ஆதிதிராவிடர் நலனுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.4099 கோடி நிதி வீண்.. பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு..!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆதிதிராவிட நல்லனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை முழுவதும் பயன்படுத்தாமல் இருப்பது திமுக அரசின் மெத்தனப்போக்கை வெளிப்படுத்துகிறது. தமிழக அரசு பின்தங்கிய மாணவர்கள் மீது அலட்சியம் காட்டுவதாக தனது அறிக்கையின் மூலம் குற்றம் சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "சமூகத்தில் பின்தங்கிய வகுப்புகளில் இருக்கும் மாணவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் எப்படியாவது முன்னேறி விட வேண்டும் என மேற்படிப்பிற்காக ஆண்டுதோறும் சென்னை நோக்கி வருகின்றனர்.

ஆனால் தமிழக அரசின் ஆதிராவிட நல துறையால் நடத்தப்படும் மாணவர் விடுதிகளில் போதிய அடிப்படை வசதிக்கு கூட  போராட வேண்டிய அவல நிலை உள்ளது.

தமிழக அரசு சார்பில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 33 நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டதில் 20 திட்டங்கள் கூட செயல்படுத்தவில்லை. கடந்த ஆண்டு ஆதிதிராவிட நலத்துறைக்கு ரூ.4,099 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

அதில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் ரூ.757 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால் ஆதிதிராவிடர் நல மாணவர்கள் விடுதிக்கு இந்த நிதி செலவிடாதது ஏன் என்ற கேள்விக்கு திமுக அரசு பதில் அளிக்க வேண்டும்.

இதன் மூலம் அரசியல் மேடைகளில் சமூகநீதி நாடகத்தை அரங்கேற்றும் திமுகவின் போலி வேஷம் வெளிப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு ஆதிதிராவிடர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மீண்டும் அத்துறைக்கு வழங்கி மாணவர்களின் அடிப்படை தேவைகளையும் கல்வி, நூலகம் உள்ளிட்ட இதர பணிகளை உடனே மேற்கொள்ள வேண்டும்" என தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai alleged funds wasted in the Adi Dravida welfare dept


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->