மீனவர் பிரச்சினையில் தீர்வு கேட்டு அண்ணாமலை தலைமையில் மீனவர் பிரதிநிதிகள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் மனு...!! - Seithipunal
Seithipunal



பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழக மீனவர் பிரதிநிதிகள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு கோரி மனு அளித்துள்ளனர். 

நேற்று (ஆகஸ்ட் 5) தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழக மீனவர் பிரதிநிதிகள் டெல்லி சென்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தனர். அப்போது அவர்கள் இந்தியா மற்றும் இலங்கை இடையேயான மீனவர் பிரச்சினைக்கு, இருதரப்பு பிரதிநிதிகள் இடையேயான சந்திப்பை ஏற்படுத்தி நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று மனு அளித்துள்ளனர். 

அப்போது நடந்த சந்திப்பில் மீனவர்கள் தரப்பில், இலங்கைக் கடற்படையின் படகு மோதி தமிழக மீனவர் ஒருவர் உயிரிழந்தது குறித்தும், மேலும் காணாமல் போன ஒரு மீனவரை கண்டுபிடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவும், இதற்காக ராமநாதபுர மீனவர்கள் நடத்தும் போராட்டம் குறித்தும், மேலும் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீனவர் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர். 

அத்துடன் மீனவர்களுக்கு டீசல் மானியம் அதிகரிக்கப்பட வேண்டும். பணியில் இருக்கும்போது இறக்கும் மீனவர்களுக்கு இழப்பீடு, ஃபைபர் படகுகளுக்கு கூடுதல் மானியம், கடல் வெள்ளரி சேகரிப்பிற்கான தடை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். 

இதனிடையே மீனவ பிரதிநிதிகளுடனான இந்த சந்திப்பின் போதே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை வரவழைத்து மீனவர் பிரதிநிதிகள் முன்பே இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai And Fishermen Representatives Meets External Affair Minister


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->