நாங்க ரெடி.. நீங்க ரெடியா..? மு.க ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்..!!
Annamalai challenged is ready to contest DMK elections alone
சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் "தமிழகத்தை பொறுத்தவரை பாஜக தனித்து நின்றால் அவர்களால் ஒரு தொகுதி கூட வெற்றி பெற முடியாது. தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்து வருவதை போல் ஒரு மாயத் தோற்றம் உருவாக்கப்படுகிறது" என பேசி இருந்தார். அரசியல் வட்டாரத்தில் ஸ்டாலின் இன்றைய கருத்து பேசும் பொருளானது. திமுக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பாஜக குறித்து அதிகப்படியான கருத்துக்களை பேசி வருகின்றனர்.
அதேபோன்று "கடந்த 2001 ஆம் ஆண்டு திமுக தோளிலும், 2021 ஆம் ஆண்டு அதிமுகவின் தோளிலும் சவாரி செய்து தன் கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக பெற்றுள்ளது. எந்த காலத்திலும் பாஜகவுடன் திமுக கூட்டணி அமைக்காது இதை நான் விசிக தலைவர் திருமாவளவனுக்கு உறுதி அளிக்கிறேன்" என ஒரு விழா மேடையில் பேசியிருந்தார்.
இது நிலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டால் பாஜக ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காது என்ற செய்தி பத்திரிகைகளில் வெளியானது. இதனை மேற்கோள் காட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் சவால் விடுத்துள்ளார். அந்த பதிவில் "1967ஆம் ஆண்டு திமுக முதல்முறையாக ஆட்சிக்கு வந்தது அதன் சொந்த பலத்தில் அல்ல. சுதந்திரா கட்சி மற்றும் சிபிஎம் கட்சிகளுடன் கூட்டணி காரணமாக.
2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் அதன் தனி பலத்தால் அல்ல. 12 கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் மட்டுமே. 1967 லிருந்து திமுக ஒரு தேர்தலில் கூட தனித்துப் போட்டியிட்டதில்லை. தங்களின் அரசியல் ஆதாயங்களுக்காக பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டு இருக்கிறது. இப்படி பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தும் நீங்கள் படுமோசமான தோல்வியை சந்தித்த தேர்தல்களும் உண்டு திரு மு.க ஸ்டாலின் அவர்களே.
தமிழக பாஜக கடந்த காலங்களில் தனித்துப் போட்டியிட்டதுண்டு, இனி வரும் காலங்களிலும், அதை மீண்டும் செய்ய தயங்காது. நான் உங்களுக்கு சவால் விடுகிறேன் திரு மு.க ஸ்டாலின். கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா.? என சவால் விடுத்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இத்தகைய சவால் தற்பொழுது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருள் ஆகியுள்ளது. பாஜகவின் சவாலை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்பாரா..?? என இணையதளவாசிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
English Summary
Annamalai challenged is ready to contest DMK elections alone