குடும்பத்துடன் ஐபிஎல் போட்டி பார்த்தால், மாணவர்களின் விளையாட்டு ஆர்வம் பெருகாது.. அண்ணாமலை ட்விட்..!! - Seithipunal
Seithipunal


தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் டெல்லியில் நடைபெற உள்ளது. இதற்கான அணிகளை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தேர்வு செய்து டெல்லிக்கு அனுப்புகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் பள்ளி மாணவர்களை இன்னும் தேர்வு செய்யாமல் இருப்பதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "டில்லியில் நடைபெறவிருக்கும், பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில், தமிழக அணி சார்பில் வீரர்களைத் தேர்வு செய்யாமல் இருப்பதால், தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக வீரர்கள் பங்கேற்க இயலாமல் இருக்கின்றனர் என்ற நாளிதழ் செய்தி கண்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.

ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும், தேசிய அளவிலான போட்டிகள் என்பது கனவு. அந்தக் கனவை சீர்குலைத்திருக்கிறது திறனற்ற திமுக அரசு. புதுச்சேரியிலிருந்து தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான பள்ளிகள் அணி தேர்வாகியிருக்கும் நிலையில், தமிழக அணித் தேர்வு இன்னும் நடைபெறாமல் இருப்பது தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கையாலாகாதத்தனத்தைக் காட்டுகிறது. 

பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான வாய்ப்புகளை வழங்காமல், முதல்வர் குடும்பத்துடன் சென்று ஐபிஎல் போட்டிகள் பார்த்தால், பள்ளி மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வம் பெருகிவிடாது என்பதை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும். 

உடனடியாக, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க, தமிழக அணியைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும், விளையாட்டு வீரர்களின் கனவுகளோடு விளையாட வேண்டாம் என்றும், தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai condemned for not selecting TNgovt school students sports team


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->