உதய்பூர் நகரை கன்னையா லால் படுகொலை சம்பவம்... மாநில முதலமைச்சர் மீது அண்ணாமலை தாக்கு.!
annamalai condmn to rajasthan muder
ராஜஸ்தான் மாநிலம், உதய்பூர் நகரை சேர்ந்த கன்னையா லால் என்ற தையல்காரர், நூபுர் சர்மாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ஒரே காரணத்திற்காக, பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநில மக்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றம் ஏற்படவே, ஒரு மாதத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, கொலையாளிகள் இருவரையும் செய்த என்.ஐ. ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
"ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்த கொடூரமான கொலை சம்பவம் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது காட்டுமிராண்டித்தனம்.
காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் அவர்களது நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கு தடம்புரண்டமைக்கு அம்மாநில முதல்வர் மற்றவர்களைக் குறை சொல்கிறார்.
நமது மாண்புமிகு பாரத பிரதமரின் எண்ணம், செயல்திட்டம் மற்றும் செயல்பாடுகள் ஒற்றுமையைப் பறைசாற்றும் விதமாகவே உள்ளது.
ஆனால் தேச வளர்ச்சியை வெறுக்கும் இரட்டை முகம் கொண்டவர்களோ தொடர் தோல்வியிலிருந்து மீளப் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு வருகிறார்கள்" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
English Summary
annamalai condmn to rajasthan muder