2ஜி ராசா ஊழல்வாதிகளுக்கு எல்லாம் தந்தை! நீலகிரியில் கொந்தளித்த அண்ணாமலை!
Annamalai criticized 2G Rasa is the father of all corrupt people
நீலகிரி மாவட்டம் கூடலூர் புதிய பேருந்து நிலையம் அருகே டேன்டீ நிறுவனம் மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு தலைமை தாங்கினார். ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கோவை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என்று ஏராளமானோர் பங்கேற்றனர்.
![](https://img.seithipunal.com/media/annamalai 011.jpg)
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீலகிரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் முன்வைத்தார். அப்போது பேசிய அண்ணாமலை "பிரதமர் நரேந்திர மோடி மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை மாதத்திற்கு ஐந்து நாட்கள் ஊட்டிக்கு ஆய்வு செய்ய போக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
ஊட்டி மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். ஊட்டியில் இருக்கும் சுற்றுலா தளத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால் ஊட்டியைப் பொறுத்தவரை எதுவுமே நடக்கவில்லை. மழை பொய்தால் மண் சரிவு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகிறார்கள். நீலகிரி மாவட்டத்தில் எந்தவித ஆக்கபூர்வமான பணிகளும் நடைபெறவில்லை.
![](https://img.seithipunal.com/media/a_rasa-pmsf5.JPG)
நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கோவில் பூசாரி போன்று ஏதாவது கோயிலில் உட்கார்ந்து கொண்டு பிசாசை ஒட்டிக் கொண்டிருப்பார். அவர் இரவில் சாமக்க கோடாங்கி போன்று எந்த கோயில் உட்கார்ந்து கொண்டு எந்த பிசாசை ஓட்டுகிறார் என்று தெரியவில்லை. ஆனால் அவரை ஓட்ட வேண்டிய நேரம் உங்களுக்கு வந்து விட்டது. அவரை இந்த தொகுதியை விட்டு ஓட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது.
பல அரசியல்வாதிகள் பல வழிகளில் கொள்ளையடித்துள்ளனர். ஒவ்வொரு அரசியல்வாதிகளும் ஒவ்வொரு ஸ்டைலில் கொள்ளையடித்துள்ளனர். எல்லாருக்குமே தந்தையாக இருக்கக்கூடிய ஸ்டைலில் 2ஜி ராஜா ஊழல் செய்துள்ளார். ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துவிட்டு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு மக்களிடம் பேசுகின்ற ஒரே அரசியல்வாதி 2ஜி ராசா மட்டும் தான். அவரைத் தவிர வேறு யாராலும் இப்படி செய்ய முடியாது.
![](https://img.seithipunal.com/media/annamalai.jpg)
நீலகிரி தொகுதியில் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ராசா என்ன ஆக்கபூர்வமான பணிகளை மேற்கொண்டார் என்பது உங்களுக்கு தெரியும். சமீபத்தில் இந்து பெண்களை அவமானமாக பேசியுள்ளார். இந்து சகோதர சகோதரிகளை எந்த வார்த்தை கொண்டு பேசினார் என்பது உங்களுக்கே தெரியும். அதனால் தான் நீலகிரி மாவட்டத்தில் 90% கடைகள் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டீர்கள். எனவே எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆ.ராசாவுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்" என கண்டன ஆர்ப்பாட்டத்தில் உணர்ச்சி பொங்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
English Summary
Annamalai criticized 2G Rasa is the father of all corrupt people