சனாதனமே இந்து மதம்! 2 பேரும் 12ம் வகுப்பு போய் சேருங்க! பங்கமாக கலாய்த்த அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


கடந்த செப்டம்பர் 2ம் தேதி சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை டெங்கு, கொசு, மலேரியா, கொரோனா போன்ற ஒழிக்க வேண்டும் என பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. நாடு முழுவதும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுந்து வரும் நிலையில் அவர் பேசிய அதே மேடையில் அதனை தடுக்காமல் மௌனம் காத்ததாக அமைச்சர் சேகர்பாபுவின் மீது பாஜகவினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

மேலும் சனாதான தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் உடனடியாக பதவி விலக வேண்டும் என பாஜக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். சனாதன தர்மம் விவகாரம் நாடு முழுவதும் அரசியல் ரீதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக இடம் பெற்றுள்ள இண்டியா கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்களே உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நான் இந்து மக்களுக்கு எதிராக கருத்து கூறவில்லை என்றும், சனாதனத்தை எதிர்த்து மட்டுமே கருத்து தெரிவித்ததாகவும் கூறியிருந்தார். மேலும் நான் சனாதானம் குறித்து பேசவில்லை நான் என்றும், ஊடகவியலாளர்கள் தான் அதைப்பற்றி பேசி பெரிது படுத்துவதாகவும் தெரிவித்திருந்தார். அதேபோன்று சனாதன தர்மம் வேறு இந்து மதம் வேறு எனவும் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் 12 ஆம் வகுப்பு பாட புத்தகத்தில் சனாதன தர்மம் குறித்து இடம்பெற்றுள்ள விளக்கம் சமூக வலைதளங்களில் வைரலானது. அதனை மேற்கோள் காட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் "திரு.உதயநிதி ஸ்டாலின் & திரு.சேகர்பாபு சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அனைத்துத் தரப்பிலிருந்தும்  கண்டனங்களைப் பெற்ற பிறகு இந்து மதமும் சனாதன தர்மமும் வேறு என்று கூறினர்.

சனாதன தர்மமும் இந்து மதமும் ஒன்றே என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள 12ஆம் வகுப்பு பாடப்புத்தகம் கூறுகிறது. சனாதன தர்மமே நித்திய தர்மம் என்றும் குறிப்பிடுகிறது. பி.கே.சேகர் பாபு & உதயநிதி ஸ்டாலினை அறிவொளி பெற இந்த வகுப்பில் சேருமாறு அறிவுறுத்துகிறோம்" என விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai criticized DMK udhayanithi and sekarbabu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->