திமுக ஐடி விங் செய்யும் கோல்மால்..பி.டி.ஆர் "தடயவியல் பகுப்பாய்வுக்கு தயாரா..?" அண்ணாமலை ரீட்விட்..!!
Annamalai criticized PTR Palanivel Thiagarajan explanation
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மகன் உதயநிதி மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் ஒரே வருடத்தில் 30 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை குவித்து இருப்பதாக தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஊடகவியலாளர் ஒருவருடன் உரையாடிய ஆடியோவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
இந்த விவகாரம் கடந்த இரண்டு நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று விளக்கம் அளித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில் "இந்த ஆடியோ உண்மையில்லை. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடுத்து என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.
மேலும் வழக்கு தொடுத்தால் அது அவர்களுக்கு தேவையில்லாத விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். எனவே என் மீதான இந்த குற்றச்சாட்டை புறம் தள்ளிவிட்டு எனது பணியை தொடர விரும்புகிறேன். வரும் காலங்களில் இது போன்ற பல ஜோடிக்கப்பட்ட போலி ஆடியோ வெளியாகும்" என அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் இந்த அறிக்கையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ட்விட்டர் பதிவை ரீட்வீட் செய்து அண்ணாமலை உண்மை தன்மை குறித்தான பகுப்பாய்வுக்கு உங்களை தடுப்பது எது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த பதிவில் "மாநில நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் 2 நாட்களாக திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சமூக ஊடகங்களில் அரைகுறையாகப் போராடியதைப் படித்து, அறிக்கையாகத் தயாரித்து வெளியிட்டார். திமுக ஐடி விங் நிர்வாகிகள் செய்த போலி ஆடியோ பகுப்பாய்வை நம்பி, மாநில நிதியமைச்சர் ஒரு தற்காப்புக்காக பயன்படுத்துகிறார்.
இந்த வழக்கில் அவரது பாதுகாப்பின்மையைத்தான் அவருடைய செயல் காட்டுகிறது. திமுக ஐடி விங் நிர்வாகிகளை தவிர, இந்த தற்காப்பு வரியை யாரும் நம்ப மாட்டார்கள். ஆடியோவின் உண்மைத்தன்மை தடயவியல் பகுப்பாய்வுக்கு அனுப்புவதில் இருந்து மாநில நிதி அமைச்சரை தடுப்பது எது? ஒரு வருடத்தில் ₹30,000 கோடி - திரு மு.க ஸ்டாலின் மக்களுக்கு நிறைய விளக்க வேண்டும்" என பழனிவேல் தியாகராஜனின் விளக்கத்தை விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
Annamalai criticized PTR Palanivel Thiagarajan explanation