இதுதான் என் அரசியல் பாதை! நடந்ததை தான் சொன்னேன்! அதிமுகவிற்கு அண்ணாமலை பதிலடி! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் நடைபெற்ற பல ஆட்சிகள் ஊழல் ஆட்சிகள் என்றும், முன்னாள் முதலமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் என்று, ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி, அதிமுகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

மேலும், இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் அண்ணாமலை பேசியதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இந்நிலையில், அண்ணாமலை தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், "ஆங்கில நாளேடுக்கு நான் அளித்த பேட்டியை சரியாக புரிந்துகொள்ளாமல் அதிமுக தலைவர்கள் பேசி வருகின்றனர்.

தவறை சுட்டிக்காட்டி தெளிவு படித்தினால் அதை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் இல்லை. கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக அவர்கள் விரும்புவதை மட்டுமே பேச முடியாது.

கூட்டணி தர்மம் பற்றி எனக்கு பாடம் நடத்த தேவையில்லை. தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் நடந்ததையே நான் கூறினேன். 

பிரதமர் மோடியை பார்த்து அவர்களின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவன் நான். தமிழகத்தின் எதிர்காலம் குறித்த எனது கனவுகளை, கொள்கையை அடமானம் வைக்க எனக்கு விருப்பமில்லை" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai Reply to ADMK And Edappadi Palanisami for JJ issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->