உலகளவில் ஆ.ராசாவுக்கு 2ம் இடம்! எதில் தெரியுமா? கொளுத்தி போட்ட அண்ணாமலை!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணத்தை நீலகிரி மாவட்டத்தில் உதகை உள்ள சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள தனியார் கல்யாண மண்டபத்தில் இருந்து துவங்கிய நடைபயணம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஏடிசி திடல் முன்பு நிறைவடைந்தது.

அப்போது பொது மக்கள் மத்தியில் பேசாம அண்ணாமலை ''நீலகிரி தொகுதி எம்.பி ஆ.ராசா நீலகிரி மாவட்ட மக்களின் பிரச்னைகள் எதற்கும் தீர்வு காணாமல் ஒரு சுற்றுலா பயணி போல் நீலகிரி மாவட்டத்திற்கு இரண்டு நாள் வந்துவிட்டு செல்கிறார். டைம் பத்திரிக்கை ஆய்வில் உலக அளவில் தன்னுடைய பதவியை துஷ்பிரயோகம் செய்தவர்கள் பட்டியலில் ஆ.ராசா 2ம் இடத்தில் உள்ளார். 

தமிழகத்தில் நீலகிரி உட்பட 11 மாவட்டங்களுக்கு மருத்துவக் கல்லூரிகளை கொடுத்தவர் பிரதமர் மோடி. தமிழகத்திற்கு முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.1,568 கோடி கடன் நீலகிரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்தால் நேரடியாக நாடாளுமன்றத்தில் பிரச்னைகளை கூறி மத்திய அரசின் நிதிகளை எளிதில் பெறலாம்" என பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalai said ARasa is on 2nd place in power misuse in the world


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->