தமிழக நலனை பலி கொடுத்த வரலாறு திமுகவிற்கு உண்டு..!! அண்ணாமலையின் கண்டன அறிக்கை..!! - Seithipunal
Seithipunal


கேரள மாநில அரசு எல்லை வரையறையின் போது தமிழக மண்ணை கையகப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் "கேரள மாநில அரசு "எண்டே பூமி" என்ற பெயரில் தமிழக கேரள எல்லை பகுதியில் டிஜிட்டல் நில அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்தின் சில பகுதிகளை கேரள அரசு கையிரபடுத்தி வருகிறது. 

இதன் மூலம் புதிய கணக்கெடுப்பு வரையறை முடிந்த பின் தமிழக பகுதிகள்  அதிகாரப்பூர்வமாக கேரள எல்லைக்குள் செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 17ஆம் தேதி நாகர்கோவில் அடுத்த ஆனைக்கால் பகுதியிலும், தேனி பாப்பம்பானையிலும் கேரள அரசு 80 ஏக்கர் நிலத்தை தங்களுக்கு சொந்தமானது என கையகப்படுத்தி உள்ளது. 

அதேபோன்று இடுக்கி தேனி எல்லையில் அமைந்துள்ள மங்களதேவி கண்ணகி கோயிலின் நிர்வாகத்தின் உரிமைகளில் கேரள அரசு தலையிடுகிறது. கோயிலை பாதுகாக்க தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேசிய அரசியலில் பதவி கனவுக்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்ணை மூடிக்கொண்டு கேரளா அரசின் அத்துமீறல்களை அனுமதிக்கிறார். 

தமிழக நிலங்கள் மூலம் மக்களின் நலனை காவு கொடுத்து பதவி ஆசைக்காக மௌனம் காக்கிறார். தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காக தமிழக நலனை பலி கொடுத்த வரலாறு திமுகவிற்கு உண்டு. இதனை தமிழக பாஜக என்றும் அனுமதிக்காது. தமிழகத்திலிருந்து ஒரு சதுர அங்குலம் மண்ணை கூட கேரளா அரசு கொண்டு செல்ல தமிழக பாஜக அனுமதிக்காது" என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai said DMK has history of sacrificing welfare of TN


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->