மோடியை பார்க்க வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை..!! - அண்ணாமலையின் சர்ச்சை பேச்சு..!!
Annamalai said he donot need to queue to see Modi
கடந்த ஏப்ரல் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையத்தில் புதிதாக ரூ.1,260 கோடி மதிப்பில் 1.36 லட்சம் சதுர மீட்டரில் அமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த முனைய கட்டிட திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை வந்தார். இந்த நிகழ்ச்சிகளில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை.
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இதைப் பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டதால் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் பிரதமர் கலந்துகொண்ட இந்த நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் பிரதமர் வரவேற்கும் விஐபிகள் பட்டியலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பெயரும் இடம் பெற்று இருந்தது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பிரதமர் மோடி வருகையின் போது ஏன் பங்கேற்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார். இது குறித்த பேசிய அவர் "தம்பி நீ இங்கு வர வேண்டாம். உனக்கு அளிக்கப்பட்டு இருக்கக் கூடிய பணி, கர்நாடக பணி. நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்து அளிக்க வேண்டிய பணி, உன்னுடைய பணி. எனவே நீ இங்கு வர வேண்டாம் என்று பிரதமரே என்னிடம் தொலைபேசியில் கூறினார்.
உடனே இங்கு சிலர் அண்ணாமலை மீது மோடிக்கு கோபம் என்றெல்லாம் கூறுகிறார்கள். மோடியை பார்க்க தமிழகத்திற்கு வந்து வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை." என பதில் அளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தமிழகம் வருகையின் போது தமிழக ஆளுநர் முதல் பாஜக மூத்த நிர்வாகிகள் வரை அனைவரும் வரிசையில் நின்று பிரதமர் மோடியை வரவேற்ற நிலையில் அண்ணாமலையின் இத்தகைய பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.
English Summary
Annamalai said he donot need to queue to see Modi