நான் இருக்கும் வரை அதிமுக வுடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை - அண்ணாமலை பேட்டி!
Annamalai Speaks about ADMK
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி ஒரு பேட்டியில், "பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்திருந்தால் எங்கள் கூட்டணி சுமார் 30 - 35 இடங்கள் வரை வென்றிருப்போம்" என்று கூறியிருந்தார். மேலும் அண்ணாமலையின் அதீதமான வாய்த் துடுக்கால் தான் பாஜகவுடனான அதிமுகவின் கூட்டணி முறிந்தது.
எல். முருகன், தமிழிசை போன்றோர் தமிழக பாஜக தலைவராக இருந்தவரை அதிமுகவிற்கு பாஜகவுடன் சுமூகமான உறவு இருந்தது. அண்ணாமலை வந்த பிறகு தான் இந்த கூட்டணி பிரிந்தது" என்று முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியிருந்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கோவை விமனநிலைத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "வேலுமணிக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே ஏதோ பிரச்சினை இருப்பது போல் தெரிகிறது. அவரது அரசியல் அறிவு எப்படிப்பட்டது என்று அவர் பேசுவதிலேயே தெரிகிறது.
சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் அதிமுகவினரை கோவை மக்கள் முழுவதுமாக புறக்கணித்து விட்டனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் மட்டுமல்ல, எந்த தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி என்பது நான் பாஜக தலைவராக இருக்கும்வரை சாத்தியமில்லை" என்று கூறிய அண்ணாமலை,
மேலும் என்மீது உள்ள கோபத்தை அப்பாவி ஆட்டின் மீது காட்ட வேண்டாம். நான் கோவையில் தான் இருக்கிறேன். இங்கு வந்து என் மீது கை வையுங்கள்" என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
English Summary
Annamalai Speaks about ADMK