நெருங்கும் தேர்தல்: மக்களை நம்பி வலிமையான கூட்டணி..! அண்ணாமலை பேட்டி!
Annamalai speech issue
மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தி.மு.க கூட்டணி கட்சி தொகுதி பங்கீடு நிறைவடைந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் பா.ம.கவை கொண்டுவர தமிழக பா.ஜ.க கடந்த சில தினங்களாக தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தியது.
மேலும் இன்று காலை தமிழக பா.ஜ..க தலைவர் அண்ணாமலை இணைய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் ராமதாஸ் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில் பா.ஜ.க -பா.ம.க இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதனை தொடர்ந்து பா.ம.கவுக்கு பாஜக 10 இடங்களை ஒதுக்கி உள்ளது.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் மாற்று அரசியலை கொண்டு துடித்துக் கொண்டிருக்கிறார்.
மக்களை நம்பி வலிமையான கூட்டணியை அமைத்துள்ளோம். ஒரே மேடையில் பிரதமர் மோடியுடன் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்ள வேண்டும் என்பதே எங்களது விருப்பம்.
பா.ம.கவுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். தேசிய ஜனநாயக கூட்டணியின் மூத்த தலைவராக ராமதாஸ் இருப்பார் என தெரிவித்துள்ளார்.