இந்த அமைச்சரை உடனே அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்.. வெளியான பரபரப்பு தகவல்.!! - Seithipunal
Seithipunal


போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ் எஸ் சிவசங்கர் போக்குவரத்து துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணி புரிந்து வருபவர் ராஜேந்திரன். இவர் கடந்த மார்ச் 27ஆம் தேதி அமைச்சர் ராஜகண்ணப்பன் அழைப்பை ஏற்று, அவரை சந்திக்க சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சாதிப்பெயரை கூறியதாகவும், வேறு மாவட்டத்திற்கு அவரை பணியிடை மாற்றம் செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார் என்றும் ராஜேந்திரன் புகார் தெரிவித்து இருந்தார். இதனால் தான் அமைச்சர் ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. 

இந்நிலையில், இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில், நேற்று முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் BDO ஆக பணியாற்றி வரும் ராஜேந்திரன் அவர்கள் தன்னை அமைச்சர் ராஜ கண்ணப்பன் சமுதாய ரீதியாக திட்டியுள்ளதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.

இன்று ராஜ கண்ணப்பன் அவர்களைப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றி அரசு அறிவித்துள்ளது! சாமானிய மக்களுக்கும் இதே சட்டம் பொருந்துமா? வழக்குப் பதிவு செய்யாமல் துறை மாற்றுதல் எந்த மாதிரியான முடிவு? அமைச்சர் மேல் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, உண்மையான நியாயம் கிடைக்க வேண்டும் என்று இந்த அரசு விரும்பினால் ராஜ கண்ணப்பன் அவர்களை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

annamalai tweet for minister raja kannappan


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->