மயிலாடுதுறையில் வரும் 26-ம் தேதி எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மக்கள் பல்வேறு வகைகளில் பெருந்துன்பங்களை சந்தித்து வருவது தொடர்கதையாக உள்ளது.

ஸ்டாலினின் தி.மு.க. அரசு மக்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தாமல் வெற்றுத் தம்பட்டம் அடித்துக்கொண்டு, தனது குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.

அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், இதர மருத்துவ ஊழியர்கள் இல்லை என்றும்; மருந்துப் பொருட்கள் பற்றாக்குறை இருப்பதாலும், நோயாளிகள் சிகிச்சைபெற முடியாமல் மிகுந்த அவதியுற்று வருவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

ஸ்டாலினின் தி.மு.க. ஆட்சியில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள், தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே மிகுந்த சிரமப்பட்டு வரும் நிலையில், நோயாளிகள் தங்கள் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று உரிய சிகிச்சை பெற இயலாத நிலை ஏற்பட்டுள்ளதை, அறிக்கைகள் வாயிலாக அவ்வப்போது நான் எடுத்துக் கூறியும், மக்களின் உயிரைக் காப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் இந்த அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. நோயாளிகளுக்கு குறித்த நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்காமல் வேதனையில் ஆழ்த்தி வரும் ஸ்டாலினின் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மருத்துவனைக்கு வருகை தரும் அனைத்து நோயாளிகளுக்கும் உடனடி சிகிச்சை அளிக்க வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மயிலாடுதுறை மாவட்டத்தின் சார்பில், வருகிற 26-ம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணியளவில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எதிரில், மயிலாடுதுறை மாவட்டக் கழகச் செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Announcement of edappadi palaniswami demonstration on 26th mayiladuthurai


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->