சபாநாயகருக்கு எதிராக மீண்டும் ஒரு MLA மனு.. புதுச்சேரி அரசியலில் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை  2-சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் மனு அளித்துள்ள நிலையில் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன் சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கம் செய்யக்கோரி  சட்டப்பேரவை செயலரிடம் மனு அளித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.இந்த ஆட்சியில்  சபாநாயகராக இருப்பவர்தான்  பாஜகவை சேர்ந்த மணவெளி தொகுதி எம்.எல்.ஏ. ஏம்பலம் செல்வம்.
இவர் சபாநாயகர் பதவிக்கான விதி, மரபுகளை மீறி செயல்படுவதாக தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில் புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்த சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு சமீபத்தில்  சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர கோரி சட்ட சபைசெயலர் தயாளனிடம் மனு அளித்தார்.இதையடுத்து  பாஜகவை ஆதரிக்கும் திருபுவனை தனி தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. அங்காளன்,  சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி சட்டசபை செயலர் தயாளனிடம்மனு அளித்தார். இந்த தீர்மானம் குறித்து சட்டசபையில் விவாதிக்கப்படும் என சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்திருந்தார்.

புதுச்சேரி சட்டசபையில் மொத்தம் உள்ள 6 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் பா.ஜனதாவை ஆதரித்து வருகின்றனர். இதில் மீதமுள்ள சிவசங்கரன், ஸ்ரீனிவாஸ் அசோக் ஆகியோர் என்ன நிலைப்பாடு? எடுக்க உள்ளனர் என தெரியவில்லை என்று கூறப்பட்டு வந்தநிலையில் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன் சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கம் செய்யக்கோரி  சட்டப்பேரவை செயலரிடம் மனு அளித்துள்ளார். .

அதேநேரத்தில் சபாநாயகருக்கு எதிராக மேலும் சில எம்.எல்.ஏ.க்களையும் திரட்டி நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு வலு சேர்க்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Another MLA files petition against Speaker Politics in Puducherry


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->