சின்னத்திரை நடிகர் பிரபாகரன் மாரடைப்பால் மரணம்..! - Seithipunal
Seithipunal


தமிழ் சின்ன திரை நடிகர் பிரபாகரன் காலமாகியுள்ளார். இவர் 'வாணி ராணி', 'பனி விழும் மலர் வனம்', 'கயல்', 'கெட்டி மேளம்' உள்ளிட்ட பல தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

சென்னை முகலிவாக்கத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த இவர்,  இன்று படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்துள்ளார்.அதன் பின் சிறிது நேரம் ஓய்வு எடுத்துள்ளார். அப்போது அவருக்கு நெஞ்சு வலிப்பதாக துடித்ததை தொடர்ந்து, குடும்பத்தினர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு பிரபாகரனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால்  உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். சின்னத்திரை தொடர்களில் கடந்த 15 வருடங்களாக அப்பா கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்றவர். பிரபாகரனின் மறைவு சின்னத்திரை நடிகர்கள் நடிகைகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Small screen actor Prabhakaran dies of a heart attack


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->