தனிக்கட்சி.. தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பம்.. ஓபிஎஸ் அதிரடி மூவ்!
OPS ADMK BJP Alliance
2026 தமிழக சட்டமன்ற தேர்தல் பரபரப்பு இப்போதே சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக மற்றும் பாஜக கூட்டணி நேற்று மீண்டும் உருவாகியுள்ளது.
இந்த கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடமில்லை என்பதற்கான முயற்சிகள் எடப்பாடி பழனிசாமியால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால், ஓபிஎஸ் தனிப்பட்ட ஓர் அரசியல் கட்சியை தொடக்கி செயல்படத் தொடங்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது, எதிர்கால அரசியல் சந்தர்ப்பங்களை கணித்து புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக தேர்தல் ஆணையத்தில் ஒரு கட்சிக்காக விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கட்சிக்கு "எம்.ஜி.ஆர். அதிமுக" என பெயர் பதியப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முயற்சி அவரது நெருக்கமான ஆதரவாளரால் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை ஓ.பன்னீர்செல்வம் விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.