விஜய் சேதுபதியின் 'பான் இந்தியா' படத்தில் இணைந்துள்ள நடிகை தபு..!
Tabu Joins Vijay Sethupathi in Puri Jagannadh Pan India Film
நடிகர் விஜய் சேதுபதி விடுதலை 02 படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் 'டிரெயின்' படத்திலும், ஆறுமுக குமார் இயக்கத்தில் 'ஏஸ்' படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில், தற்போது, 'கடைக்குட்டி சிங்கம், எதற்கும் துணிந்தவன்' போன்ற படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பிசினஸ்மேன், டெம்பர், லிகர், டபுள் இஸ்மார்ட்' உள்ளிட்ட படங்களை இயக்கிய பூரி ஜெகன்நாத் இயக்கவுள்ள புதிய படம் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். பான் இந்திய படமாக தயாராகவுள்ள இப்படத்தை நடிகை சார்மி கவுர் தயாரிக்கவுள்ளார்.
அத்துடன், இப்படத்தில் நடிகை தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தபுவும் இந்த படத்தின் கதையில் ஈர்க்கப்பட்டு உடனடியாக நடிப்பதற்கும் ஒப்புக்கொண்டுள்ளார் என கூறப்படுகிறது.
English Summary
Tabu Joins Vijay Sethupathi in Puri Jagannadh Pan India Film