தமிழகத்தில் நடந்த அதானியின் 3000 கோடி ஊழல்! கேள்வி கேட்கும் போராட்டத்தை அறிவித்த அறப்போர் இயக்கம்! - Seithipunal
Seithipunal


அதானியின் நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யாத மத்திய அரசையும், மாநில அரசையும் கேள்வி கேட்போம் வாருங்கள என்று அறப்போர் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்த அதன் அறிவிப்பில், இந்தியா முழுவதும் அதானியின் ஊழலால் பல மின்சார வாரியங்கள் தத்தளித்து வருகின்றன. மேலும் சமீபத்தில் அதானி மின்சார வாரிய பொது ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டார் என்று அமெரிக்காவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதன் மீது இந்தியாவில் எப்பொழுது விசாரணை நடக்கும்?? இந்தியா முழுவதும் நடக்கும் அதானியின் ஊழல்கள் நடத்தவில்லை?. இந்தியாவின் சொத்துக்களை அதானிக்கு விற்க தான் மத்திய அரசு செயல்படுகிறதா?? 

தமிழ்நாட்டில் நடந்த அதானியின் 3000 கோடி நிலக்கரி இறக்குமதி ஊழலின் மீது இன்றுவரை ஏன் FIR  பதிவு செய்யப்படவில்லை?? அரசுகள் அதானி கொள்ளை அடித்த  பணத்தை அதானியிடம் இருந்து மீட்க வேண்டும். மக்கள் மேல் பாரமாக எதற்காக கரண்ட் பில் ஏற்றுகிறார்கள்? வாருங்கள் மத்திய மாநில அரசுகளை அதானியின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுக்க வைப்போம்!

இந்தப் போராட்டத்திற்கான திட்டமிடல் கூட்டம் வருகிற ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 15 மாலை 5 மணிக்கு அறப்போர் நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் நடக்க உள்ளது.  தன்னார்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ளவும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arappor Iyakkam Announce Adani Scam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->