வெட்கமாக இல்லையா முதல்வர் ஸ்டாலின் அவர்களே..? கேள்விகளால் கிழித்தெடுத்த அறப்போர் இயக்கம்! - Seithipunal
Seithipunal


அறப்போர் இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், வெட்கமாக இல்லையா முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே..? லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கி FIR போடப்பட்ட ஒரு திருட்டு அதிகாரியை கைது செய்து சிறையில் அடைக்காமல் அவரை மேலும் லஞ்சம் வாங்க வேறு பதவியில் நியமித்த செய்தி வெளிவந்து இரண்டு நாட்கள் கடந்தும், எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவியில் அமர்ந்து இருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், இந்தியாவின் பணக்கார தொழிலதிபர் அதானி சென்னைக்கு வருகிறார். அவருக்கு தமிழக காவல்துறை சல்யூட் அடித்து பாதுகாப்பாக கூட்டி செல்கிறார்கள். அப்படியானால் அவர் எங்கே சென்றிருப்பார் என்று தமிழக அரசுக்கு தெரியும். 

ஆனால் அதானி சித்தரஞ்சன் சாலை வந்து தமிழகத்தின் முதல்வரை சந்தித்தாரா என்ற கேள்விக்கு அரசு தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. 

ஒரு வேளை சந்திக்கவில்லை என்றால் அதை தைரியமாக சொல்ல வேண்டியது தானே. அப்படி சந்தித்து இருந்தால் அதற்கான காரணத்தை சொல்லி இருக்கலாமே. இப்படி திருடனுக்கு தேள் கொட்டியது போல அமைதியாக இருக்க என்ன காரணம்? என்று அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arappor Iyakkam Condemn to CM MK Stalin Adani Scam DMK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->