46 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட சிவன் கோவில்; ஹோலி கொண்டாடி திறந்து வைத்த பொதுமக்கள்..! - Seithipunal
Seithipunal


46 ஆண்டுகளுக்கு மூடப்பட்ட சிவன் கோவிலில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் கடந்த 1978-இல் மூடப்பட்ட பஷ்ம சங்கர் கோவில் அல்லது கார்த்திகேய மஹாதேவ் கோவில் என அழைக்கப்படும் சிவன் கோவில். இந்த கோவிலில் அனுமன், சிவலிங்கம் சிலைகள் இருந்துள்ளன. ஆனால்,  கடந்த 1978-இல் குஜராத்தில்  ஏற்பட்ட மதக் கலவரம் காரணமாக இந்த கோவில் பூட்டப்பட்டுள்ளது. 

46 ஆண்டுகள் அவர் கேட்பாரற்று அஇந்த கோவில் அப்படியே  பூட்டிக் கிடந்ததும் விசாரணையில் தெரிந்துள்ளது. இதையடுத்து, கோவில் திறக்கப்பட்டு வழிபாடுகள் முறையாக நடத்தப்பட்டு, 46 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்றைய தினம் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டுள்ளது. விழாவில், பொதுமக்கள், சமூக அமைப்பினர், விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்டோர் தரிசனம் செய்துள்ளனர்.

உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சம்பல் மாவட்டத்தின் கக்கு சராய் பகுதியில், கடந்த டிச., 13-ல் சட்ட விரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது.  அப்போது, முழுதுமாக மூடப்பட்டு கிடந்த ஒரு கட்டடத்தை அதிகாரிகளும், போலீசாரும் கண்டறிந்து விசாரித்துள்ளனர்.  அப்போதுதான் அது ஒரு சிவன் கோவில் என தெரிய வந்துள்ளது.

அத்துடன், உ.பி  சம்பலில், கடந்த நவம்பர் 24-இல் தொல்லியல் துறையினர் ஆய்வுக்கு சென்ற போது நடந்த வன்முறையில், நான்கு பேர் உயிரிழந்த, 'ஷாஹி ஜமா மசூதி' அமைந்துள்ள இடத்தில் இருந்து மிக அருகில், கார்த்திகேய மஹாதேவ் கோவில் உகண்டிபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

First time in 46 years Holi celebrated at Sambhal Shiva Temple


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->