தங்க கடத்தல் கும்பலில் அரச அதிகாரிகளுக்கும் தொடர்பா..? விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சி.பி.ஐ...!
Are government officials also involved in the gold smuggling gang
துபாயில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வரப்படும் விவகாரத்தில், அரசு ஊழியர்களுக்கு இருக்கும் தொடர்பு இருக்கலாம் என சி.பி.ஐ., விசாரணையை தொடங்கியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து, இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வரப்படுவது தொடர்ந்தும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், துபாயில் இருந்து, 19 கோடி ரூபாய் மதிப்பிலான, 21.28 கிலோ தங்கம் கடத்தி வந்த ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த இருவர், மும்பை விமான நிலையத்தில் கடந்த 06ம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்கள் அடிக்கடி துபாயில் இருந்து மும்பை பயணித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், துபாயில் இருந்து அதிக அளவிலான தங்கம் கடத்தி வரப்படும் விவகாரத்தில் சர்வதேச கடத்தல் கும்பலின் பங்கு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
அதாவது, விமான நிலையங்களில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களின் உதவியின்றி இதுபோன்ற தொடர் கடத்தல்கள் சாத்தியமில்லை என்பதால், இது தொடர்பில், சி.பி.ஐ., விசாரணை நடத்துவதற்கு வருவாய் புலனாய்வுத் துறை பரிந்துரைத்துள்ளது. இதனை தொடர்ந்து, அடையாளம் தெரியாத அரசு ஊழியர்கள் மற்றும் தனிநபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள சி.பி.ஐ., விசாரணையை ஆரம்பித்துள்ளது.
English Summary
Are government officials also involved in the gold smuggling gang