மீனவர்கள் கைது விவகாரம்; டெல்லியில் வெளியுறவு துறை அமைச்சரை சந்தித்த தமிழ்நாடு மீனவர் சங்க பிரதிநிதிகள்..!
Tamil Nadu Fishermens Association representatives met the External Affairs Minister in Delhi
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள், இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காணவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைதான சமயத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த மாதம் இலங்கைக்கு செல்லவுள்ளார். அப்போது, குறித்த விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதன் அடிப்படையில், தமிழ்நாடு மீனவர் சங்க பிரதிநிதிகள், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை டெல்லியில் நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவர் அன்பழகன், ஜேசுராஜ், தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநிலச் செயலாளர் சதீஷ்குமார் , மீனவர் பிரிவு மாநிலத் தலைவர் எம்.சி.முனுசாமி மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் குழுவுடன் டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தோம்.
தூதுக் குழுவினரின் குறைகளைக் கேட்டறிந்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் அனைத்து ஆதரவையும், பிரதிநிதிகள் குழு எழுப்பிய கவலைகளுக்கு நிரந்தர தீர்வை அளிப்பதாக உறுதி அளித்தோம் என பதிவிட்டுள்ளார்.
English Summary
Tamil Nadu Fishermens Association representatives met the External Affairs Minister in Delhi