"அப்பா டாஸ்மாக்" தமிழ்நாட்டின் பேரிடர்! ஊழல் முறைகேடுகளின் ஊற்றுக்கண்! அறப்போர் இயக்கம் விமர்சனம்!
Arappor Iyakkam Condemn to TASMAC Appa Senthilbalji DMK
அறப்போர் இயக்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "டாஸ்மாக் போக்குவரத்து டெண்டர் பாக்ஸ் டெண்டர் போட்டீங்க உங்கள் துறையில்! இப்போ அதுல அமலாக்கத்துறை வேற வெற்றி பெற்றவர் dd தேதியே டெண்டர் முடிந்த பிறகு தான் எடுக்கப்பட்டிருக்குனு கண்டுபிடித்திரிக்கிறார்கள்.
இதுல நீங்க வெளிப்படைதன்மை பற்றி எல்லாம் பேசலாமா? எந்த டிஸ்டிலரிகிட்ட எவ்வளவு கேஸ் கொள்முதல் பன்னீங்க என்பது கூட இணையதளத்தில் இல்லை.
RTI இல் கேட்டால் வர்த்தக ரகசியம் என்று சொல்கிறீர்கள். அப்படி என்ன தான் உங்க துறைக்கும் டிஸ்டிலரிக்கும் ரகசியமோ??
அப்பா டாஸ்மாக் வெளிப்படைதன்மை இல்லாத ஊழல் முறைகேடுகளின் ஊற்றுக்கண்.
அப்பா டாஸ்மாக் தமிழ்நாட்டின் மிகப்பெரிய வறுமை உண்டாக்கும் திட்டம்
அப்பா டாஸ்மாக் தமிழ்நாட்டின் சமூக பொருளாதார சீரழிவு திட்டம்
அப்பா டாஸ்மாக் தமிழ்நாட்டின் பேரிடர்!
English Summary
Arappor Iyakkam Condemn to TASMAC Appa Senthilbalji DMK