நீங்க தவெக மாநாட்டிற்கு போறீங்களா?...இதோ உங்களுக்கான பிரத்யேக முக்கிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம்,  விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டின் பிரம்மாண்ட ஏற்பாடுகள் காரணமாக விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
மேலும் மாநாட்டில் பங்கேற்பதற்காக தொண்டர்கள் இன்று அதிகாலை முதலே சாரை சாரையாக வரத்தொடங்கி உள்ளனர். குறிப்பாக கடலூர், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள், ரசிகர்கள், தொண்டர்கள் அதிகாலை முதலே குவிந்து வருகின்றனர்.

மாநாட்டில் அதிக கூட்டம் கூடுவார்கள் என்பதால், காலை 10 மணிக்கே மாநாட்டு திடல் திறக்கப்பட்டு உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், விஜய் மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கட்டணமின்றி செல்ல  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு டிஜிட்டல் சான்றிதழ் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக மாநாட்டு திடலின் பல்வேறு இடங்களில் கியூஆர் கோட் வைக்கப்பட்டுள்ள நிலையில், இதில் ஸ்கேன் செய்து சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Are you going to theonference here is an exclusive important announcement for you


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->