மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து - மத்திய அமைச்சர் அறிவிப்பு!
Arittapatti issue Central minister announce
மதுரை: அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் தோண்டுவதற்கு மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாத தொடக்கத்தில் ஏலத்தின் மூலம் அனுமதி அளித்தது.
இந்த திட்டத்திற்கு தமிழக அரசு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காத நிலையில், அரிட்டாபட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்கள், அரசியல் கட்சியினர், மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில், அரிட்டாபட்டி போராட்டக்குழு நேற்று டெல்லியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து, அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கான திட்டத்தை ரத்து செய்ய கோரியுள்ளனர்.
மேலும், அரிட்டாபட்டி மக்களுக்கு இன்று ஒரு மிக மிக மகிழ்ச்சியான செய்தி அதிகாரபூர்வமாக வரும். நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளோம் என்று அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
English Summary
Arittapatti issue Central minister announce