ஆம்ஸ்ட்ராங் வழக்கில் புதிய திருப்பம்: கைமாறிய வெடிகுண்டு... தனியாக விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! - Seithipunal
Seithipunal


ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுவது குறித்து தனியாக விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5 ஆம் தேதி பெரம்பூரில் வெட்டி கொலை செய்யப்பட்டார். கடந்த ஆண்டு பட்டினப்பாக்கத்தில் ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி வாங்கும் வகையிலேயே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் வடசென்னை தாதா நாகேந்திரன், அவரின் மகன் உள்பட 28 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்த வழக்கு எழும்பூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் இருந்து முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட 27 பேர் நேரில் ஆஜர்படுத்தப்பட்டு, 5,000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வரப்பட்டு, கைமாற்றப்பட்டதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வெடிகுண்டு வரப்பட்டது குறித்து தனியாக விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் போலீசாருக்கு அறிவுத்தியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Armstrong case chennai high court 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->