அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முதல்பரிசு வென்ற கார்த்தி கண்ணீரில் கதறல்.! அன்றே சொன்ன தங்கர்பச்சான்.!
avanioyapuram jallikattu karthi
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் கடந்த 14ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், அவனியாபுரம் கார்த்திக் என்ற மாடுபிடி வீரர் 26 காளைகளை அடக்கி முதல் பரிசை வென்றார்.
மேலும் சிறந்த மாடுபிடி வீரர் பரிசாக முதல்வர் முக ஸ்டாலின் பெயரில் வழங்கப்பட்ட காரினை, அமைச்சர் மூர்த்தியிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இதுகுறித்து மாடுபிடி வீரர் கார்த்திக் தெரிவிக்கையில்,
"போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மிகவும் பின்தங்கிய குடும்ப சூழ்நிலையில் இருந்து வரக்கூடியவர்கள் தான் அதிகம். சொல்லப்போனால் தினமும் சாப்பாட்டுக்கே நாங்கள் போராடக் கூடியவர்களாக இருந்து வருகிறோம்.
ஆனால், கிரிக்கெட், ஹாக்கி, கைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டுகளில் விளையாடுபவர்கள் வசதி படைத்தவர்களாக இருக்கிறார்கள். நாங்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு குடியிருக்க வீடு இல்லை. வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம்.
எனக்கு வசிப்பதற்கு வீடு இல்லை. ஆனால், வீதி உலா செல்வதற்கு கார் எதற்கு?
ஒரு கட்டிட தொழிலாளியின் மகனான என்னால்.., இந்த காரை வைத்து பெட்ரோல் போட முடியுமா?
காரை நிறுத்த எண்ணி அந்த வீட்டில் இடம் கூட இல்லை?
இந்த சிறந்த மாடுபிடி வீரர்கள் காண பரிசாக கார் வழங்குவதற்கு பதில்., எங்களுக்கு அரசு வேலை வழங்கி உதவி செய்ய வேண்டும்" என்று கார்த்தி தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பாகவே தமிழ் திரைப்பட இயக்குனரும், சமூக ஆர்வலருமான இயக்குனர் தங்கர்பச்சான் தனது ட்விட்டர் பக்கத்தில், கார்த்தி கேட்ட அதே கேள்வியை., கேட்டு இருந்தார். இதுகுறித்த அவரின் அந்த பதிவில்,
"சென்ற ஆண்டும் போட்டியில் வெற்றி பெற்ற ஜல்லிக்கட்டு வீரருக்கு கார் பரிசளித்த போது இதே கோரிக்கையை அரசிடம் அளித்திருந்தேன். ஆனால் அதேபோல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு வீரருக்கு முதல் பரிசாக முதலமைச்சர் கார் வழங்குவதாக செய்தியை அறிகிறேன்.
வீரர்கள் உயிரைப்பணயம் வைத்து பங்கு பெரும் இப்போட்டிகளை நடத்துவதில் ஒவ்வொரு தமிழரும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றோம்! இப்போட்டியில் வென்றவர்களை ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்படும் பரிசுகள் குறித்து இப்பொழுதாவது அரசு சிந்திக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே இதேபோல் காரினைப் பரிசாகப் பெற்ற வீரர்கள் எந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள்? எந்த மாதிரியான வாழ்க்கையை இப்போது அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
காரின் தொகைக்கு ஈடாக அந்த வீரனுக்கு உழவுத் தொழில் தொடர்பான கருவிகள், மாடுகள்,நிலம் இவைகளைத் தந்து அவருடைய வாழ்வுக்கு முன்னேற்றம் ஏற்படுத்தித் தந்தால் இன்னும் கூடுதலான மகிழ்ச்சியை நாம் அடையலாம்! பரிசு தரும் காரை வைத்துக்கொண்டு (எரிபொருள்) பெட்ரோல் டீசல் விற்கும் விலையில் அதற்கு செலவழிப்பதற்காகவே அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கும் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். தயவு கூர்ந்து முதலமைச்சர் இக்கோரிக்கைக் குறித்து சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
avanioyapuram jallikattu karthi