பரபரப்புக்கு மத்தியில் உதயநிதிக்கு வந்த சம்மன் - அதிர்ச்சியில் அரசியல் களம்.!
banglore court summon send to uthayanithi stalin
சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ம் தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போல் ஒழிக்க வேண்டும் என்று பேசினார். இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
மேலும், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்தனர். அந்த வகையில், உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பெங்களூருவைச் சேர்ந்த பரமேஷ் என்பவர் பெங்களூருவில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்
இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, உதயநிதி ஸ்டாலின் வரும் மார்ச் மாதம் 4-ம் தேதி நேரில் ஆஜராக பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் உதயநிதிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
English Summary
banglore court summon send to uthayanithi stalin