தமிழக அரசியலில் திடீர் திருப்பம்... பாஜகவுடன் ஓபிஎஸ் கூட்டணி... தயாராக இருக்கும் ஆதரவாளர்கள்...!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் அதன் கூட்டணி கட்சிகளுடன் இடைத்தேர்தல் குறித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. அதேபோன்று அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் அதிமுக இரு கட்சிகளும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளன. இதனை தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக செய்திகள் கசிந்தன. மேலும் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது பேசிய அவர் "ஈரோட்டில் போட்டியிட நாங்கள் தயாராக இருக்கிறோம். அண்ணன் ஓபிஎஸ் உத்தரவிட்டால் இரட்டை இலை சின்னத்தில் நானே போட்டியிடுவேன். ஓபிஎஸ் என்ன சொல்கிறார் என்பதற்காக காத்திருக்கிறோம். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பாஜகவுடன் பேசிய பின்னர் ஓபிஎஸ் முடிவு செய்வார்" என செய்தியாளர்கள் சந்திப்பில் ஓபிஎஸ் ஆதரவாளர் பெங்களூர் புகழேந்தி பேசியுள்ளார். பாஜக தலைமையிலான கூட்டணியில் ஓபிஎஸ் இணைவார் அல்லது பாஜகவில் இணைந்து விடுவார் என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் இந்த இடைத்தேர்தலில் அது உறுதியாகிவிடும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bengaluru Pugazhendi said OPS talk with BJP for alliance


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->