ஆட்சிக்கு வந்த 1 மணி நேரத்துக்குள் மதுவிலக்கை ரத்து செய்வோம் - பகிரங்கமாக தேர்தல் வாக்குறுதி கொடுத்த பிரசாந்த் கிஷோர்! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தவரான ஜன ஜன் சுராஜ் என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்க உள்ள பிரசாந்த் கிஷோர், வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் நோக்கில் களம் இறங்கியுள்ளார்.

மகாத்மா காந்தியின் பிறந்த நாளான வரும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி, ஜன ஜன் சுராஜ் என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்க உள்ள பிரசாந்த் கிஷோர், முதல் தேர்தல் வாக்குறுதியையும் தற்போது அறிவித்துள்ளார்.

அதன்படி, பிகர் மாநிலத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்த 1 மணி நேரத்துக்குள், அமலில் உள்ள மதுவிலக்கை ரத்து செய்வோம் என்று ஒரு அருவருத்தக்கத்தக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதுவும் மகாத்மா காந்தியின் பிறந்த நாளில் கட்சியை ஆரம்பித்து, அவரின் மதுவிலக்கு கொள்கைக்கு எதிராக, மது விளக்கை ரத்து செய்வோம் கீழ்த்தரமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பிரசாந்த் கிஷோர்.

மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் பிரசாந்த் கிஷோர் தெரிவிக்கையில், முதல்வர் நிதிஷ் குமாரின் மதுவிலக்கு அமல் என்பது கண்துடைப்பு வேலை. இந்த மதுவிலக்கால் எந்த பலனும் இல்லை. 

மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாக மதுபானங்கள் ஹோம் டெலிவரி செய்யப்படுகிறன. அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் சட்டவிரோத மது விற்பனையால் பயனடைகின்றனர். 

இந்த மதுவிலக்கால் மாநிலத்துக்கு ரூ.20,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பெண்களின் வாக்கு கிடைக்காமல் போகுமே என்று மதுவிலக்குக்கு எதிராக பேச தயங்குமவன் நான் இல்லை என்று பீகார் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bihar Prashant Kishore Announce


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->