பாஜக - தவெக கட்சிக் கூட்டணியா? அப்படி ஒன்னும் தெரியல...! - நயினார் நாகேந்திரன்
BJP - tvk Party alliance I dont know anything about that Nainar Nagendran
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக நேற்று முன்தினம் டெல்லி சென்றார். டெல்லியில் அவர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பாஜக அமைப்பு செயலாளர் எல்.சந்தோஷ் ஆகியோரை சந்தித்து உரையாடினார்.

இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடியை நயினார் நாகேந்திரன் நேற்று மதியம் அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது நயினார் நாகேந்திரன் பிரதமருக்கு போர்வை அணிவித்து 'ஜல்லிக்கட்டு' சிலையை பரிசாக வழங்கினார். இந்நிலையில், காஞ்சிபுரத்திலுள்ள காமாட்சி அம்மன் கோவிலில் இன்று அவர் சாமி தரிசனம் செய்தார்.
நயினார் நாகேந்திரன்:
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவிக்கையில்,"பாஜக - தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பேச்சு நடப்பதாக எனக்குத் தெரியவில்லை.
நேற்று தான் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்துவிட்டு, இன்று அம்மாளை தரிசிக்க வந்துள்ளேன். உங்களை (செய்தியாளர்கள்) சந்திக்கிறேன், நாளை கோட்டையில் சந்திப்போம்.
திமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும். தேர்தல் வருவதற்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. தேர்தல் பணியை அவர்கள் ஆரம்பித்து இருக்கலாம்; ஆனால் ஆட்சிக்கு வருவதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
BJP - tvk Party alliance I dont know anything about that Nainar Nagendran