அல்லு அர்ஜுன் - அட்லீ கூட்டணியில் இணைந்துள்ள அனன்யா பாண்டே..?
Ananya Panday joining Allu Arjun and Atlee film
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன், இவர் 'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு தமிழ் இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ளார். ஷாருக்கானின் 'ஜவான்' மற்றும், தெறி படத்தின் ரீமேக் படமான 'பேபி ஜான்' வெற்றிக்கு பிறகு அட்லீ இப்படத்தை இயக்கவுள்ளார்.
அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் படம் இதுவாக்கும். இதனால்இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. படத்தில் 03 கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதில், ஜான்வி கபூர் மற்றும் மிருணாள் தாகூர் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், 3-வது கதாநாயகியாக அனன்யா பாண்டே இனைந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Ananya Panday joining Allu Arjun and Atlee film