மீண்டும் ஷாருக்கானுடன் 'கிங்'படத்தின் மூலம் இணைந்துள்ள தீபிகா படுகோன்..!
Deepika Padukone has teamed up with Shah Rukh Khan again through the film King
இந்தி பட உலகில் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான 'பதான்', 'ஜவான்', 'டங்கி' ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
தற்போது ஷாருக்கான் 'கிங்' படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவரது மகள் சுஹானா கானும் நடிக்கிறார். இப்படத்தை வார் மற்றும் பதான் பட புகழ் சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார்.

மே 18-ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், சுஹானா கானின் அம்மாவாக தீபிகா படுகோன் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், அதுஉறுதியாகியுள்ளது. ஆனால், அவருடைய கதாபாத்திரம் என்பது பற்றி இன்னும் அதிகார பூர்வ தகவல்கள் வெளியாவில்லை.
தீபிகா படுகோன், ஷாருக்கானுடன் இணைந்து ஏற்கனவே, 'ஓம் சாந்தி ஓம்', சென்னை எக்ஸ்பிரஸ்', 'ஹேப்பி நியூ இயர்', 'பதான்' மற்றும் 'ஜவான்' ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Deepika Padukone has teamed up with Shah Rukh Khan again through the film King